Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
இந்த வார ராசிபலன் (05.02.10 முதல் 11.02.10 வரை)
திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2007, 11:29 [IST]



Weekly


மேஷம்

பொது: திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் ஆரோக்கியமானதாக அமையும். கூடுதல் முயற்சியால் முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள்.

பெண்களுக்கு: கல்வி தொடர்பான விவகாரங்களுக்கு செலவினங்கள் கூடலாம். தடைபட்ட மங்கல காரியங்கள் நல்லமுறையில் ஈடேறும்.

வேலை பார்ப்போருக்கு: பணிச்சூழலில் பரபரப்பு காணப்படும். அவசரப்பட்டு செய்த வேலையினால் உயரதிகாரிகளின் சுட்டிக்காட்டலுக்கு ஆளாக நேரிடும்.

ரிஷபம்

பொது: நீண்ட நாளாக நிலுவையில் இருந்த காரியத்தை முடிக்க துடிப்பீர்கள். திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. செவ்வாய் கிழமை சிறப்பான நாள்.

பெண்களுக்கு: நிதி நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டு அகலும். மன உறுதியோடு இருக்க வேண்டிய வாரம்.

வேலை பார்ப்போருக்கு: வேலைப் பளு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. பிரபல நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும்.

மிதுனம்

பொது: எந்த காரியத்தை மேற்கொண்டாலும் அது நன்மையிலேயே முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூர்வீக விவகாரங்களில் சிக்கல் நீங்கும்.

பெண்களுக்கு: சுபநிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடிய சூழல்கள் அமையும். புகழும், பொருளும் அதிகரிக்கும். தாய் வழியில் ஆதாயம் பெறுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: பதிவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும். பணியிடங்களில் பரபரப்பாக இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


கடகம்

பொது: முனைப்புடன் செயல்பட்டு காரியத்தை சாதித்துக்கொள்வீர்கள். வரவும், செலவும் சமமானதாக இருக்கும். மேற்கு திசையில் இருந்து வரும் தகவலால் ஆதாயம் உண்டு.

பெண்களுக்கு: புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சனிக் கிழமை அனுகூலமான நாள். கலை மற்றும் மீடியா துறையை சார்ந்தவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

வேலை பார்ப்போருக்கு: ​உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகளை தக்க சமயத்தில் செய்து முடிப்பீர்கள். பண வரவு உண்டு.

சிம்மம்

பொது: செயலில் ஆற்றல் பிரகாசிக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பெரியவர்களின் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

வேலை பார்ப்போருக்கு: கூட்டு முயற்சியால் லாபம் உண்டாகும். பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

கன்னி

பொது: அவசரகோலத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நிதானித்து செயல்படவேண்டிய வாரம். தெற்கு திசையில் இருந்து நல்ல தகவல் வரும்.

பெண்களுக்கு: பண விரயம் ஏற்படக்கூடும். மனதில் சலனங்கள் தோன்றி மறையும். தெளிவான சிந்தனையால் சிக்கலை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலக ரீதியான வரவுகளுக்கு வாய்ப்புள்ளது. திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

துலாம்

பொது: உற்சாகமாக செயல்படுவீர்கள். பழைய விரோதங்கள் மறைந்து அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை விசேஷமான நாள்.

பெண்களுக்கு: கவனக்குறைவால் தேவையற்ற பிரச்னைக்கு ஆளாக நேரிடலாம். இடமாற்றத்துக்கு வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சி லாபம் தரும்.

வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் சுமூக சூழ்நிலை காணப்படும். முக்கிய பொறுப்பில் உள்ள நபரால் அனுகூலம் ஏற்படும். வர்த்தகத் துறை சார்ந்தவர்களுக்கு சிறப்பான வாரம்.

விருச்சிகம்

பொது: வாக்குறுதிகள் தரும் முன்னர் பல தடவை யோசிப்பது நல்லது. முக்கியமான காரியம் ஒன்றை இந்த வாரம் செவ்வனே செய்து முடிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மனம் சஞ்சலமடைய வாய்ப்புள்ளதால் தியானம் செய்யுங்கள்.

வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை உற்சாகமாக காணப்படுவீர்கள்.

தனுசு

பொது: தடுமாற்றம் அடையக் கூடிய சூழல்கள் ஏற்படலாம். ரத்த உறவுகள் கைகொடுக்கும். முயன்று சுறுசுறுப்பை வரவழைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுங்கள்.

பெண்களுக்கு: கடின முயற்சிக்கு பின்னரே காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. புதன் கிழமை நல்ல தகவல் தேடி வரும்.

வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தேடி வந்த கடன்களின் மூலம் சில பணிகளை முடிப்பீர்கள்.

மகரம்

பொது: செயல்பாடுகளில் துணிச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெற்றி சற்று தள்ளிப்போகலாம். ஞாயிறன்று தியானம் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.

பெண்களுக்கு: எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு முக்கிய பிரச்னை ஒன்றை தீர்ப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் மன சஞ்சலம் ஏற்படக்கூடும். உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் முயற்சியின் பலன்களை தாமதமாகவே பெறுவீர்கள்.

கும்பம்

பொது: மூன்றாம் நபர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கவனம் தேவை. முக்கிய காரியம் ஒன்றில் தடையோ தாமதமோ ஏற்படக்கூடும். தொடர் முயற்சியால் வெற்றியை அடையலாம்.

பெண்களுக்கு: வாக்குவாதத்தால் நண்பர்கள் அல்லது கணவனுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். புதிய நபர்களிடம் உஷாராக இருங்கள்.

வேலை பார்ப்போருக்கு: பணியிடம் அல்லது பதவியில் மாற்றமோ அல்லது கூடுதல் பொறுப்போ கிடைக்கக்கூடும். கூட்டு முயற்சியால் லாபமடைவீர்கள்.

மீனம்

பொது: நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை ஈடேற்ற வேண்டிய வாரம். புதன் கிழமையன்று தியானம் மேற்கொண்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு: தீவிரமான முயற்சிகளின் மூலம் முக்கிய காரியம் ஒன்றை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வடக்கு திசையில் இருந்து வரும் தகவலால் ஆதாயம் உண்டு.

வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த சில மாற்றங்கள் நிகழும். வேலைப்பளு காரணமாக மன உளைச்சல் ஏற்படக்கூடும். வியாழன் கிழமை அனுகூலமான நாள்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.