புதன்கிழமை, ஜூன் 17, 2009, 17:30 [IST]
நீங்கள் கூகுளில் தேடலில் ஈடுபடு்ம்போது உங்களுக்கு மிகப் பிடித்தமான இணையத்திலிருந்தும் தேடல் விடைகளைப் பார்க்க விரும்பலாம். உதாரணத்துக்கு தட்ஸ்தமிழில் உங்கள் தேடலுக்கான விடை உள்ளதா என்று அறிய நீங்கள் விரும்பலாம். இதற்கு உதவுவது தான் கூகுள் சப்ஸ்கிரைப்ட் லிங்க்ஸ்.
உங்களுக்கான சர்ச் ரிசல்டுகளை காட்டும்போது நீங்கள் விரும்பிய இணையத் தளத்திலிருந்தும் லிங்குகளை இது காட்டும்.
இதற்கு நீ்ங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுள் அக்கெளண்ட்டில் முதலில் சேர வேண்டியது தான். அந்த அக்கெளன்ட் இல்லாதவர்கள் www.google.com/account என்ற லிங்கில் சென்று இணையலாம்.
பின்னர் லாக்-இன் செய்துவிட்டு கூகுளில் சர்ச் செய்தால் நீங்கள் விரும்பிய இணையத்தின் ரிசல்டுகளையும் சேர்த்துப் பார்க்கலாம்.