Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
ரஜினிக்கு 'கெஸ்ட் ரோலா?'- மோகன்லால்
Thursday, August 28 2008

கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.

குசேலன் படத்தின் ரிசல்ட் ரஜினி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குசேலன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை கெஸ்ட்ரோலில் பார்ப்பதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

இருப்பினும், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள், வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு கெஸ்ட் ரோலாகட்டும், சாதாரணமாக வந்து போகும் கேரக்டராகட்டும், ஒரு சீனில் வருவதாக இருக்கட்டும், எளிதான விஷயம். ஆனால், கமல், ரஜினி அப்படி நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் மோகன்லால்.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.