கமல்ஹான் இயக்கத்தில் உருவாகும் மர்மயோகியில் பிரபலமான 4 நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது பழைய செய்தி. பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷூம் அந்தப் படத்தின் ஒரு ஹீரோவாக நடிக்கிறார் என்பது புதுச் செய்தி.பிரமிட் சாய்மிரா தயாரிக்கும் இந்த மர்மயோகி, தெலுங்கிலும் நேரடியாக வெளியாவதால், அங்குள்ள முன்னணி நாயகன் ஒருவரை நடிக்க வைப்பது நல்ல 'பலனை'த் தரும் என்ற கமல்ஹாசனின் வியாபாரக் கணக்கைப் பார்த்து பிரமித்த பிரமிட் சாய்மிரா நிறுவனம் ஓடோடிப் போய் வெங்கடேஷை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் தயங்கியிருக்கிறார் வெங்கடேஷ். எப்படியும் கமல் படத்தில் அவரை டாமினேட் பண்ணும் வாய்ப்பு தமக்கில்லை என்ற நினைப்பில் தயங்கியவரிடம், அவரது வேடத்தின் முக்கியத்துவம் குறித்து பிரமாதமாக எடுத்துச் சொல்ல, கடைசியில் சமாதானமாகி ஒப்புக் கொண்டுள்ளாராம்.
மர்மயோகி தெலுங்குப் பதிப்பில் வெங்கடேஷூக்கு கூடுதல் காட்சிகள் வருமாறு பார்த்துக் கொள்வதாகவும் கமல் வாக்களித்திருக்கிறாராம்.
ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் பத்மப்ரியா ஆகிய நான்கு பிரபலங்கள் நாயகிகளாக நடிப்பது தெரியும்தானே..!