சூர்யாவுடன் சேர்ந்து வாரணம் ஆயிரம் படத்தைப் பார்க்கலாம் - இங்கல்ல அமெரிக்காவில்.மனைவி ஜோதிகா, குழந்தை தியாவோடு ஜாலியாக அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் சூர்யா. சான்பிரான்சிஸ்கோவில் அவர் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சூர்யாவின் அமெரிக்க பயணத்தைப் பயன்படுத்தி அவர் நடித்த வாரணம் ஆயிரம் படத்திற்கு அமெரிக்காவில் பாப்புலாரிட்டியை தேட தீர்மானித்தனர் படத்தின் விநியோகஸ்தர்கள்.
2வது வாரமாக அங்கு வாரணம் ஆயிரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பே ஏரியா பகுதியில், இன்று சூர்யா - ரசிகர்கள் சந்திப்புக்கு வாரணம் ஆயிரம் பட விநியோகஸ்தரான பரத் கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரசிகர்களோடு சேர்ந்து சூர்யாவும் வாரணம் ஆயிரம் படத்தைப் பார்க்கவிருக்கிறார். இதேபோல படம் ஓடும் பிற தியேட்டர்களுக்கும் சூர்யா விசிட் அடிப்பார் எனத் தெரிகிறது.