Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
கார்த்திக்கு கே.வி.ஆனந்த் கல்தா... சிம்புவுக்கு வெல்கம்!
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 15:09 [IST]



Aayirathil Oruvan
நடித்து ஒரே படம்தான் வெளிவந்துள்ளது. அது கூட முழுமையாக அமீரின் வெற்றியாகப் பார்க்கப்படும் பருத்தி வீரன். ஆனால் கார்த்தி பண்ணுகிற அலம்பல் தாங்க முடியவில்லை என்கிறது இயக்குநர்கள் வட்டாராம்.

ஆரம்பத்தில் 'செட்டுக்கு வந்தோமா, நடித்துக் கொடுத்தோமா' என்று போய்க்கொண்டிருந்த கார்த்தி, இப்போது கதை உள்பட பல விஷயங்களிலும் தான் சொன்னதே இருக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாராம். இதில் அவர் இழந்தது ஒரு பெரிய பட வாய்ப்பை!.

அயன் என்ற பெரிய பிளாக் பஸ்டர் கொடுத்த இயக்குநர் கே.வி.ஆனந்த். இவர் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தம் போட்டு, கதை விவாதமும் நடந்துள்ளது. இந் நிலையில் கதையில் நிறைய குறுக்கீடுகள் செய்த கார்த்தி, தனது இமேஜுக்கேற்ப காட்சிகள் உருவாக வேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட்டாராம்.

இதைப் பார்த்த கே.வி.ஆனந்த் கடுப்பாகிவிட்டாராம். சரி போயிட்டு வாங்க கார்த்தியை இந்தப் பக்கம் பேக்கப் பண்ணவர், இன்னொரு பக்கம் பெரிய வெற்றிப் படம் அமையவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு கதவைத் திறந்து விட, அவர் கப்பென்று பிடித்துக் கொண்டார் வாய்ப்பை.

'கதையே எனக்கு தெரிய வேணாம் சார். கூப்பிடறப்ப வர்றேன்... சொல்ற மாதிரி நடிக்கிறேன். அன்லிமிடட் கால்ஷீட்... நாம ஜெயிக்கிறோம்' என்று உற்சாகமாக ஒப்பந்தமாகிவிட்டார் சிம்பு.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.