Oneindia Mobile
NEED EXTRA CASH? Enter Your Email Here!

பா விஜய் நடிக்கும் பிரபா!
வெள்ளிக்கிழமை, நவம்பர் 13, 2009, 17:37 [IST]



Pa Vijay with Sridevika
ஞாபகங்கள் என்று ஒரு படம் எடுத்தார் முன்பு பா விஜய். சொந்தப் படம். அதன் ரிசல்ட் இன்னும் அவர் ஞாபகங்களை விட்டு அகலாத நிலையில், புதிய படம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்துக்கு 'பிரபா' என டைமிங்காக பெயர் வைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "ஞாபகங்கள் சரியாகப் போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் நடிகனாக வேண்டும் என்று நினைத்தபோதே எழுதிய கதை 'பிரபா'.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை. முதல் படமாக இந்தக் கதையைச் செய்தால் விமர்சனங்கள் வருமே என்று நினைத்து ஞாபகங்கள் படம் செய்தேன்.

ஆனால் வணிக ரீதியாக சில விஷயங்களை அந்தப் படத்தில் சரியாக சேர்க்க முடியாததால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகுதான் அறிமுக நடிகனுக்கு இமேஜ் தேவையில்லை எனப் புரிந்துகொண்டேன். 'பிரபா' படத்தில் ஒரு முழு நீள அதிரடிப் படம். ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன். ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன்..." என்றார் பா.விஜய்.



»Home  »Tamil  »News  »Movies  »Font Help  »Sitemap 

© Greynium Information Technologies Pvt. Ltd.