திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 16:52 [IST]
ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்கு தனது பங்காக ரூ 15 லட்சத்தை, அம்மாநில முதல்வர் ரோஸய்யாவிடம் கொடுத்தார் நடிகர் விக்ரம்.
ஞாயிற்றுக் கிழமை காலை ஹைதராபாத் சென்ற அவர், முதல்வர் ரோஸய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தெலுங்கு திரையுலகம் நடத்திய நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்த விக்ரம், அன்றைக்கு லேஹ் பகுதியில் செல்வராகவனின் படப்பிடிப்பில் இருந்ததை விளக்கினார்.
பின்னர் ஆந்திர மக்களின் துயர் துடைக்க தன்னாலான உதவித் தொகையாக ரூ 15 லட்சத்தை அளித்தார். தமிழ் நடிகர்களில் அதிக நிதி கொடுத்தவர் விக்ரம்தான்.
ஏற்கெனவே தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் ரூ.20 லட்சம் ஆந்திர மாநில வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுவிட்டது.