Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
ரிஷாவின் கவர்ச்சி 'கரகம்'
Friday, November 21 2008

கரகம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில், அட்டகாசமான பாட்டுக்கு கவர்ச்சி கரகாட்டம் ஆடியுள்ளார் ரிஷா.

மூக்கையா பாண்டியன் என்பவர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ரொம்ப காலத்திற்கு முன்பு ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தைப் போலவே, இந்தப் படத்தின் நாயகனும் கரகாட்டம்தான்.

சந்தோஷ்பாண்டியன் என்ற புதுமுகம்தான் இப்படத்தின் நாயகன். ஸ்ரீநிதா, அஸ்விதா என இரு நாயகிகள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்துக்காக படு கவர்ச்சிகரமான ஒரு கரகப் பாட்டை படமாக்கியுள்ளனர். ஆடியவர் ரிஷா.

ஒண்ணுங்கிறானே, ரெண்டுங்கிறானே
ஒன்னோட எண்ணைச் சேர்த்தா மூணுங்கிறானே என்று தொடங்கும் அந்தப் பாடல் அச்சு அசல் இளசுகளுக்காகவே எழுதப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது.

ரிஷாவின் இந்த குத்தாட்டம் படு ரிச்சாக வந்திருக்கிறதாம். இவர் தவிர மற்ற இரு நாயகிகளும் கூட சிறப்பான முறையில் கவர்ச்சி தானம் செய்திருக்கிறார்களாம்.

'கெரகம்' என்று சொல்ல முடியாத அளவுக்கு இருந்தால் சரிதான்.!



Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.