Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
திரிஷா-பிகினி..மேலும் சில...!
Friday, November 21 2008

சர்வம் படத்தில் கலக்கல் பிகினியில் திரிஷா நடிப்பது குறித்து ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா. இப்போது அதுகுறித்த கூடுதல் செய்திகளை அறிய தொடர்க... (ரொம்ப முக்கியம்!)

நயனதாராவுக்கும், திரிஷாவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற யுத்தம்தான் அது. இந்த யுத்தத்தால் பலனடைந்திருப்பது ரசிகர்கள்தான்.

போட்டி போட்டு இருவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளனர். இந்தப் போட்டியில் இதுவரை நயனதாராதான் முதலிடத்தில் உள்ளார்.

பில்லா படத்திலும், ஏகன் படத்திலும் அவரது கவர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் பிரியா மணியும், தெலுங்குப் படம் ஒன்றில் பிகினியில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறடித்துள்ளார்.

இப்படி ஏரியாவுக்கு ஏரியா போட்டி ஜாஸ்தியாகிக் கொண்டே போவதால் திரிஷாவும் கவர்ச்சிக் களத்தில் குதித்துள்ளார். சர்வம் படத்தில் இதுவரை நடித்ததை விட சற்று கூடுதலான கவர்ச்சியில் அவர் நடித்துள்ளாராம்.

இப்படத்திற்காக பிகினியிலும் அவர் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். படத்தை இயக்கியிருப்பது விஷ்ணுவர்த்தன்.

சமீபத்தில் கோவா கடற்கரையில் வைத்து இந்த பிகினி காட்சிகளை படமாக்கியுள்ளனர். படு மெல்லிசான பிகினியில் இந்தக் காட்சியில் தோன்றுகிறாராம் திரிஷா.

மாடலிங் செய்தபோது பிகினியில் தோன்றியுள்ளார் திரிஷா. அதன் பின்னர் நடிக்க வந்த பிறகு பிகினி பக்கம் அவர் போனதே இல்லை. ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் பிகினியில் நடித்தார். ஆனால் என்ன நினைத்தாரோ, அது வேண்டாம் என கூறி நீக்கச் சொல்லி விட்டார்.

ஹரியின் ஆறு படத்தில் நடித்தபோது பிகினி டைப்பிலான, லேசான கவர்ச்சி டிரஸ்ஸை கொடுத்து நடிக்கக் கூறியபோது முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் திரிஷா. இதற்காக சில நாட்கள் ஷூட்டிங்குக்கும் அவர் மட்டம் போட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் இப்போது 'நயன் சின்ட்ரோம்' படு வேகமாக தாக்க ஆரம்பித்திருப்பதால் 'சர்வம்' கிளாமர் மயம் என்ற பாலிசிக்கு திரிஷா மாறி விட்டதாக தெரிகிறது!


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.