Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
தமன்னாவுடன் காதல்?- ஜோதிகிருஷ்ணா
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 13:06 [IST]



Jothi Krishna with Preethi Bhandari
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன்தான் ஜோதிகிருஷ்ணா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜோதிகிருஷ்ணா. அந்தப் படத்தில்தான் நடிகை ஸ்ரேயாவை அறிமுகப்படுத்தினார்.

தமன்னாவை நடிகையாக 'கேடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே. அப்போதே ஜோதி கிருஷ்ணாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இப்போது ஊலல்லலா எனும் புதிய படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் ஜோதிகிருஷ்ணா. இந்தப் படத்துக்கு இயக்குநரும் இவரே.

ஊலல்லா படத்தின் படப்பிடிப்பு நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்தது. அப்போது நிருபர்களைச் சந்தித்த ஜோதி கிருஷ்ணா கூறியதாவது:

ஊலல்லா ஒரு ஜாலியான படம். இளமைத் துள்ளலாக இருக்கும். ந்லல பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் இந்தப்படம்.

புதிய நடிகையாக ப்ரீத்த பண்டாரியை அறிமுகம் செய்கிறேன். இவரும் அசப்பில் தமன்னா போலவே இருப்பதாகச் சொல்கிறார்கள். வட இந்திய நடிகை. அதனால் முகச்சாயல் அப்படித் தெரியலாம்.

இந்தப் படத்தில் எனக்கும் ப்ரீத்திக்கும் ஒரு முத்தக் காட்சி உள்ளது. அது இந்தக் கதையை ரொமான்டிக்காகக் காட்டத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள காட்சி அது.

தமன்னாவுக்கும் எனக்கும் காதலா என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். அவருடன் ப்ரெண்ட்லியாகத்தான் பேசியிருக்கிறேன். அவரைச் சந்தித்தே ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. போனில்கூட பேசுவதில்லை. இதில் காதல் எங்கே இருக்கிறது? சும்மா எதையாவது கிளப்பிவிடுகிறார்கள். எனக்கு இந்தமாதிரி பப்ளிசிட்டியெல்லாம் தேவையில்லை...", என்றார்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.