திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 11:16 [IST]
அசல் படத்தில் நடிக்க மலேஷியா போன என்னை அந்நாட்டுப் போலீஸ் போலீஸ் தாக்கி கீழே தள்ளிவிட்டது என நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
வாரணம் ஆயிரம் படத்தில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அஜீத்துக்கு ஜோடியாக இப்போது அசல் படத்தில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மலேஷியாவில் சமீபத்தில் நடந்தது. அப்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தாராம் சமீரா. அப்போது சில போலீசார் அவரை கையை பிடித்து இழுத்து தாக்கியதுடன் கீழே தள்ளி விட்டதாகவும் செய்தி வெளியானது.
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சமீரா ரெட்டியிடம் இந்த சம்பவம் பற்றி கேட்டதற்கு, உண்மைதான்... மறக்க முடியாத மோசமான நிகழ்ச்சி அது. 'அசல்' படப்பிடிப்புக்காக சென்ற நான் கோலாலம்பூரில் நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கினேன்.
அப்போது லிப்டில் ஏறிய என்னை சிலர் தாக்கினர். கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். பொதுவாக நான் அமைதியான பெண். என்னை அவமானப்படுத்தினால்கூட பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் கோலாலம்பூர் ஹோட்டலில் நடந்த சம்பவம் என்னை வேதனைப்பட வைத்தது. அது ஒரு கெட்ட கனவு.
யாரோ ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாப்புக்காக வந்த காவலர்கள் அவர்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். நான் யாரென்பது தெரியமால் நடந்த நிகழ்ச்சி அது என்பதால் அத்துடன் விட்டுவிட்டேன் என்றார்.