மெகா டி.வியில் தினமும் ஒருமணி நேரம் இசையால் வசமான இதயங்களின் செவிகளுக்கு மட்டும் இன்றி விழிகளுக்கும் விருந்தளிக்கும் அமுதகானம் நிகழ்ச்சி 275 நாட்களை கடந்து தொடர்ந்து நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.காலத்தால் அழியாத, நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தேனிசை பாடல்களின் இனிய தொகுப்பாக தினம் தினம் காலையும், மாலையும் ஒரு மணி நேர ரசிகர்களின் ரசனைக்கேற்ப அமுத மழை பொழிந்து வரும் இந்த அமுதகானம் நிகழ்ச்சி மெகா டி.வியில் தொடந்து 150 நாட்களை கடந்து நேயர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஏதேனும் ஒரு கருத்தினை மையப்படுத்தி அந்த கருத்தோடு தொடர்புடைய சுவையான சம்பவங்களை சுவாரசியமாக தமிழ் நயத்துடன் எடுத்துரைக்கிறார், திரைப்பட இயக்குநர் ஆதவன்.
தேனிசைத் தென்றலாய், கருத்தொளிமிக்க அறிய பாடல்களின் இனிய தொகுப்பாக அமுத மழை பொழியும் இந்த அமுதகானம் நிகழ்ச்சி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 11 மணிக்கும் மெகா டி.வியில் ஒளிபரப்பு ஆகிறது.