Oneindia Mobile
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
சனிக்கிழமை, ஜூலை 4, 2009, 15:02 [IST]



Ramakrishnan with Vennila
இயக்குநராக அவதாரமெடுக்கும் கவிஞர் தபூ சங்கர்

கவிஞராக அறியப்பட்ட தபூ சங்கர் இப்போது திரைப்பட இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

தனது முதல் படத்திற்கு படு வித்தியாசமாக, கவிதை நயத்துடன் வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் என்று பெயரிட்டுள்ளார் சங்கர்.

இயக்குநரே கவிஞராக இருப்பதால் இது அக்மார்க் காதல் கதை என்பதை சொல்லத் தேவையில்லை.

கவிஞராக அசத்திய தபூ சங்கர், இந்தப் படத்தின் மூலம் அருமையான இயக்குநராகவும் பரிமளிப்பார் என்பது படத்தின் தலைப்பிலிருந்தே புரிகிறது.

முதலில் லைலா மஜ்னு என்றுதான் பெயரிட்டிருந்தனர். பின்னர்தான் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று அழகாக மாற்றினராம்.

இதுகுறித்து சங்கர் கூறுகையில் படத்தின் தலைப்பு கவிதை போலத் தெரிவதால் நிச்சயம் இது வெற்றிப் படமாக அமையும் என்கிறார் நம்பிக்கையுடன்.

சென்னையில் நடந்த பட பூஜையில், இயக்குநர் சேரன், தயாரிப்பாளர் -நடிகர் எஸ்.பி.பி. சரண், நடிகர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



»Home  »Tamil  »News  »Movies  »Font Help  »Sitemap 

© Greynium Information Technologies Pvt. Ltd.