Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
அசினுக்கு வெறும் கனவான லண்டன் ட்ரீம்ஸ்!
வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 13:40 [IST]



Salman Khan with Asin
அசின் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்த அவரது இரண்டாவது இந்திப் படம் லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

கஜினி மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அசின், அடுத்து சல்மான்கானுடன் நடித்த படம் லண்டன் ட்ரீம்ஸ். ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது.

இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார் அசின். இந்தியா முழுக்க சல்மானுடன் ஜோடியாக சுற்றுப் பயணம் போய் படத்துக்கு விளம்பரம் தேடினார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படம் என்ற விமர்சனங்கள் வரத்துவங்கிவிட்டதால், பாக்ஸ் ஆபீஸில் தோல்விப்பட வரிசையில் சேர்த்துள்ளனர் லண்டன் ட்ரீம்ஸை.

குறிப்பாக படத்தில் அசின் நடிப்பை ஏகத்துக்கும் கிண்டலடித்துள்ளன வட இந்திய மீடியாக்கள். "அசின் ஒரு பேக்கு மாதிரி வருகிறார்... பேந்தப் பேந்த விழிக்கிறார்... அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல் திறமை இருக்கிறதென்று இப்படியெல்லாம் பில்ட் அப் கொடுத்தார்கள்", என வாரியிருக்கிறார் பிரபல விமர்சகர் ஒருவர். இது அசினை ஆடிப்போக வைத்துள்ளது.

இந்த நிலையில் அசின் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த ஷாரூக்கானின் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதா இல்லையா என்ற விவாதம் எழுந்துள்ளதாம் ஃபராகான் அலுவலகத்தில்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.