Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
ராஜீவ் நாள்: தலைவர்கள் அஞ்சலி
Wednesday, August 20 2008

டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. ராஜீவ் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

சோனியா காந்தியுடன், மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் இரு குழந்தைகளும் உடன் வந்திருந்தனர்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாக இன்று கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பெரும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.