Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
ரியாத் தமிழர்கள் ரத்ததானம்
Thursday, August 28 2008

ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ரத்ததான முகாம், கிங் பஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெறும்.

தமிழ் நெஞ்சங்கள் ஏற்பாடு செய்து நடத்தும் இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு குருதி கொடையளிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குருதி கொடையளிக்க விரும்புபவர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

பைஸல்: 0507809247, மாஹீன்: 0542540860, நவ்லாக்: 0509181890

கடல் கடந்தும் கூட தானம் செய்பவர்கள் தமிழர்கள் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சவுதி அரேபியாவில் அதிகமாக ரத்ததானம் செய்தவர்கள் தமிழர்கள்தான்.

கடந்த ஆண்டு தமிழர்கள் ஏற்பாடு செய்து நடத்திய முகாமில் 172 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாஹ், நியூ செனையா, ஷிஃபா போன்ற பகுதியில் இருந்து வருபவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை ரியாத் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ளது.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.