Oneindia Mobile
பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
Wednesday, September 03 2008

சென்னை: சென்னையில் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் 2வது தெருவில் வசிக்கும் வெங்கடாசலத்தின் மகள் ஆச்சியம்மை (23). சாப்ட்வேர் என்ஜினியரான இவர் அடையாறி்ல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடுகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் அலுவலகத்தில் சோகமாக இருந்த ஆச்சியம்மை, திடீரென்று கட்டிடத்தின் 9வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆச்சியம்மை இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து கோர்ட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.