Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
ஆஸி.க்கு வெற்றி இலக்கு 382
Sunday, November 09 2008

நாக்பூர்: நாக்பூர் டெஸ்ட் போட்டியி்ல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி, 98 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னிலை வலுவாகியுள்ளது.

நாக்பூரில் நடந்து வரும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 441 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை நோக்கி வேகமாகப் போனது. இருப்பினும் இந்தியப் பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலியாவை 355 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்தியா. ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி, ரன் ஏதும் எடுக்காமல் இருந்தது இந்தியா.

இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஷேவாக்கும், அறிமுக வீரர் முரளி விஜய் கிருஷ்ணாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் 59 ரன்களும், முரளி விஜய் கிருஷ்ணா 37 ரன்களும் எடுத்திருந்தனர்.

உணவு இடைவேளையின்போது இந்தியாவின் ரன் முன்னிலை 184 ஆக இருந்தது
Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.