புதுக்கோட்டை: இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை அறுகே உள்ள தெக்கத்தூர் கிராமத்தில் அகதிள் முகாம் உள்ளது.
இங்குள்ள அகதிகள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.