கொழும்பு: கிளிநொச்சி அருகே உள்ள முகமலை பகுதியை புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. இந்த மோதலில் புலிகள், ராணுவம் தரப்பில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.கிட்டத்ட்ட 6 நாட்கள் நடந்த கடும் மோதலுக்குப் பின் கிளிநொச்சிக்கு வடக்கே உள்ள முகமலையி்ன் 8 கி.மீ. பகுதி தங்கள் வசம் வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் முகமலை-கிலாலிக்கு இடையிலான புலிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் ராணுவத்தின் வசம் வந்துவிட்டன.
இந்த 8 கி.மீ. நீளத்துக்கு புலிகளையும் ராணுவத்தினரையும் 500 மீட்டர் இடைவெளி தான் பிரி்க்கிறது.
ராணுவத்தின் 55வது பிரிவு முகமலை பகுதியைத் தாக்க, 53வது பிரிவு கிலாலி பகுதியை தாக்கியது. இந்த இரு தரப்பு தாக்குதலால் புலிகள் நிலை குலைந்ததாக ராணுவம் கூறுகிறது.
புலிகளின் வயர்லெஸ்களை ஒட்டு கேட்டதில் அவர்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.