Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
பெட்ரோல் விலை குறையும்!
Wednesday, November 26 2008

டெல்லி: ஆறு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர், டிசம்பர் மாத இறுதியில், பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும் எனத் தெரிகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்கப்படலாம்.

இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 147 டாலரிலிருந்து 50 டாலராக குறைந்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தான். அதை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

ஆனால் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகுதான் அதை செய்ய முடியும் என்றார் தியோரா. டிசம்பர் 24ம் தேதியுடன் 6 மாநில சட்டசபைத் தேர்தல் முடிகிறது. எனவே டிசம்பர் இறுதியில் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், காஸ் சிலிண்டர் விலையை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தியது. தற்போது அதே அளவில் விலைக் குறைப்பு இருக்கும் எனத் தெரிகிறது.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.