Oneindia Mobile
Todays Top Searches- Get here NOW!
இடிஏ ஸ்டார் பிராபர்டி நிறுவனத்துக்கு விருது
திங்கள்கிழமை, ஏப்ரல் 13, 2009, 13:38 [IST]



ETA groups chief receives award from Dudai ruler Mohammed-Bin-Rashid-Al-Magdoom
துபாய்: துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது ரியல் எஸ்டேட் பிரிவுக்காக இடிஏ ஸ்டார் பிராபர்டி டெவலப்பர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான இமார், தமீர் மற்றும் யூனியன் பிராபர்டி ஆகியவை இந்த விருதைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் இந்த ஆண்டு ஒரே நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த விழாவில், இந்த விருதை அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து இடிஏ குழுமத்தின் தலைவர் செய்யது சலாஹூதீன் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் இடிஏ அஸ்கான் இந்த விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.