Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
தீவிரவாதம்-யுஎஸ் 'கண்காணிப்பு பட்டியலில்' 4 லட்சம் பேர்!
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 17:39 [IST]



400000 Names on FBI Terror Watch List
வாஷிங்டன்: அமெரிக்காவின் தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் 4 லட்சம் பெயர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் தினந்தோறும் இந்தப் பட்டியலில் சராசரியாக 1,600 பேரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவும், எப்பிஐயும் சேர்த்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களை உளவுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உரிய விசாரணைக்குப் பின் தினந்தோறும் சராசரியாக 600 பெயர்கள் வரை இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றன.

ஒரு கட்டத்தில் இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கூட தாண்டியதாம். இதில் 5 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு இப்போது 5 லட்சம் பெயர்கள் உள்ளனவாம்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் அமெரிக்காவில் வசிப்பவர்கள் 5 சதவீதத்துக்கும் கீழ் தானாம். மற்றவர்கள் எல்லாம் பிற நாடுகளில் வசிப்பவர்கள்.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.