Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்-எஸ்ஐ சஸ்பெண்ட்
வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 9:29 [IST]



தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் இவர் குமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பயிற்சிக்காக சென்னை சென்று வந்தார்.

நாகர்கோவில் வரும்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனை கவனித்த அதே ரயிலில் வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்கள் சிலர் அவரைப் பிடித்து நாகர்கோவில் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் டிஜிபி கேபி ஜெயி்ன் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். முதல் கட்ட நடவடிக்கையாக அவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் அவர் திடீரென நேற்று முன்தினம் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நெல்லை டிஐஜி கண்ணப்பன் பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் மூலம் வழங்கப்பட்டுள்ளது.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.