Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
5 பிரிட்டிஷ் வீரர்களை சுட்டு கொன்ற ஆப்கான் போலீஸ் அதிகாரி
வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 15:22 [IST]



UK Soldiers Body
காபூல்: ஆப்கானிஸ்தானில் 5 இங்கிலாந்து வீரர்கள் அந் நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டர். அவர் தீவிர தலிபான் ஆதரவாளர் ஆவார்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் படைகளின் முகாமுக்குள் நுழைந்த அவர் இங்கிலாந்து வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பிரிட்டஷ் ராணுவத்தின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் பலியாயினர்.

மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். பலத்த பாதுகாப்பு மிக்க இந்த முகாமுக்குள் போலீஸ் அதிகாரி என்பதால் துப்பாக்கியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அவர் ஆப்கானி்ஸ்தான் தேசிய போலீஸ் படையில் 3 ஆண்டுகளாக பணியில் இருப்பவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த போலீஸ் படையை அமெரிக்காவும் பிரிட்டனும் உருவாக்கி அதன் காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வரும் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்திய அந்த நபரை அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் தேடி வரும் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கான் காவல்துறையிலும் தலிபான் ஊடுருவிவிட்டது அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலையடு்த்து அமெரி்க்க-பிரிட்டிஷ் படையினரின் முகாம்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது. ஆப்கான் போலீசாரையே அவர்கள் சந்தேதத்துடன் பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஐ.நா. விடுதி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5 ஊழியர்கள் பலியானதையடுத்து ஆப்கானி்ஸ்தானி்ல் இருந்து 600 ஊழியர்களை ஐ.நா. திரும்பப் பெற்றுள்ளது.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.