Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்தது- சவான் முதல்வராகப் பதவயேற்பு
சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 18:13 [IST]



Ashok chavan
மும்பை: பெரும் இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக இன்று மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக அசோக் சவான் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

முதல்வராக மீண்டும் அசோக் சவானே பொறுப்பேற்பார் என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் முக்கிய அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொள்வதில் காங்கிரஸுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே பெரும் அடிதடி ஏற்பட்டது. இதனால் ஆட்சியமைக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறியது.

இந்தத் தாமதத்தால், அரசியல் சிக்கலும் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று அமைச்சரவை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல்வராக அசோக் சவான் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் எஸ்.சி.ஜமீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெகன் பூஜ்பால் பதவியேற்றார்.

இவர்கள் தவிர காங்கிரஸ் சார்பில் 23 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 20 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் நீடித்து வந்த மிகப் பெரிய இழுபறி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.