Oneindia Mobile
Todays Top Searches- Get here NOW!
கனமழையால் தங்கநாற்கர சாலையில் அரிப்பு
திங்கள்கிழமை, நவம்பர் 16, 2009, 15:04 [IST]



கன்னியாகுமரி: கனமழையால் கன்னியாகுமரியில் கொட்டாரம் அருகே அமைக்கப்படும் தங்க நாற்கர சாலையின் நடுவே பல அடி தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. கொட்டாரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.

கொட்டாரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம், வயல்களுக்குள் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள், நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

கொட்டாரம் அருகே பணி நடந்து வரும் தங்க நாற்கர சாலையிலும் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாரத்தை அடுத்த ஏத்தப்பனை குளம், நரிகுளம் ஆகிய இடங்களில் தஙக நாற்கார சாலையின் குறுக்கே பல அடி தூரம் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நாற்கர சாலை தூண்டிக்கப்பட்டுள்ளது.



»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.